மாந்தை கிழக்கில் தமிழரசு வெற்றி- தொங்கு சபையே தேர்வு
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ள போதும், தொங்கு சபையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ள போதும், தொங்கு சபையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலின் வட்டார அடிப்படையிலான முடிவுகள் தெரியவந்துள்ள நிலையில், தமிழ் தேசிய பேரவை (மிதிவண்டி) 7 வட்டாரங்களையும், தமிழரசுக் கட்சி 2 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க சிறப்பு ஜெட் விமானத்தில் வியட்நாமில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
சிறிலங்காவில் 339 உள்ளூராட்சி சபைளுக்கான தேர்தலின் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியிருப்பதாகவும் அதுபற்றி விசாரணை நடத்துமாறும், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் முறைப்பாடு செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட பாடலுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் நிகால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், விரிவடையும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே ஜப்பானின் நோக்கம் என்று, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகடானியின் சிறிலங்கா பயணத்தின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உயர்மட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் சீனாவின் இரண்டு பாரிய முதலீட்டுத் திட்டங்கள் இழுபறி நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.