ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு ரணில் மகிழ்ச்சி
ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறித்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் அகிம்சா விக்ரமதுங்கவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு அரசியல் அரங்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியிடவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக 11 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை தனியாகச் சந்திக்கச் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சங்கடமான நிலையை எதிர்கொண்டு, அதிருப்தியுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பும் நிலை ஏற்பட்டது.
மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, வடக்கிலும், கிழக்கிலும் இன்று பல்வேறு இடங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் அதிக அளவு பரப்பப்பட்ட ஒரு காணொலிக் காட்சியில், இலங்கை நீதிபதியான ஈழத் தமிழர் இளஞ்செழியன் மீதான கொலைத்தாக்குதலில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், கையறு நிலையில் அவரின் மனைவியிடம் நீதிபதி இளஞ்செழியன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதுமாக, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைத்து விடும்!
இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் ஈழத்தமிழ்த் தேசம் தனது விடுதலைப் போராட்டப் பாதையில் இந்நிகழ்வின் தாக்கத்தையும் அதனுடன் கூடவந்த இடர்களையும் அழிவுகளையும் அசைபோட்டுப் பார்க்க வேண்டிய நிலையிலுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.