மேலும்

நாள்: 25th May 2025

உகந்தை முருகன் ஆலய சூழலில் புத்தர் சிலை – வள்ளியம்மன் மலை ஆக்கிரமிப்பு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை- உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் உள்ள வள்ளியம்மன் மலையில், அடாத்தான முறையில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

நோர்வே ஆய்வுக்கப்பலுக்கு சிறிலங்கா அரசு அனுமதி மறுப்பு

நோர்வேயின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான டொக்டர் பிரிட்ஜோப் நான்சன் (RV Dr. Fridtjof Nansen) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை, அரசாங்கத்தினால்  நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கனிம வளங்களை குறி வைக்கும் இந்தியா- ஆராய வந்தது குழு

சிறிலங்காவில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆராய, இந்தியாவின் சுரங்கத்துறை அமைச்சின் அதிகாரிகளைக் கொண்ட இந்திய குழுவொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்கா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா, பிரித்தானியா பயண ஆலோசனை

சிறிலங்காவில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அமெரிக்காவும் பிரித்தானியாவும், தமது நாட்டவர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் செய்வதை தவிர்க்கும் பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இராணுவ அதிகாரி மீது குற்றப்பத்திரம் தாக்கல்

லங்கா சதொசாவுக்குச் சொந்தமான 39 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர்கள் இருவர் உட்பட மூன்று பேர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

நியூசிலாந்து, போலந்து வெளியுறவு அமைச்சர்கள் சிறிலங்கா வருகின்றனர்

இரண்டு உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்குப் பின் தற்போதைய அரசு ஆட்சியில் இருக்காது

தற்போதைய அரசாங்கம் அடுத்த ஆண்டு மே 24 ஆம் திகதிக்குப் பின்னர் ஆட்சியில் இருக்காது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, தெரிவித்துள்ளார்.