மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பாரா எரிக் மேயர்?

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவரான எரிக் மேயர், செனட் வெளியுறவுக் குழுவின் முன் சாட்சியமளித்த போது, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை கைவிட வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் முன்மொழிந்துள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும்  சட்டத்தில், தற்போதைய மோசமான சட்டத்தைப் போன்ற பெருமளவு விதிகள் உள்ளதாகவும், இதனால் அதே வகையான அடக்குமுறைகள் இடம்பெறும் அபாயங்கள் உள்ளதாகவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்

ஐ.நா மனித உரிமைகள்  ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர்  ஜெரிமி லோரன்ஸ், கடந்த 13 ஆம் திகதி  “சிறிலங்கா- மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறை“ தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான ஆவணம்.

மோதலின் போதான பாலியல் வன்முறைகள் – ஐ.நா அறிக்கை குறித்து சிறிலங்கா மௌனம்

மோதல்களின் போது பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஐ.நாவின் புதிய அறிக்கை  குறித்து சிறிலங்கா அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.

அரசியலமைப்பு பேரவைக்கு 3 உறுப்பினர்களை நியமிப்பதில் இழுபறி

அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

விரைவில் சீனா செல்கிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் குறுகிய நேர சிறிலங்கா பயணத்தை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பீஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய எதிரிக்கு பிரிகேடியராக பதவி உயர்வு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, ஊடக சுதந்திர அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உடன்பாட்டை இறுதி செய்ய வருகிறது சீன குழு

அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் திட்டத்திற்கான உடன்பாட்டை இறுதி செய்வதற்காக சீனாவின் சினோபெக் நிறுவனத்தின், உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

இன்று வெளியேறும் ஜூலி சங் – பால்சோறுடன் கொண்டாடினார் கம்மன்பில

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று  சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell)  பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் முக்கிய சந்திப்புகளில் இந்திய கடற்படை துணைத் தளபதி

இந்திய கடற்படையின் துணைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் புலனாய்வுத்துறை) றியர் அட்மிரல் சிறிநிவாஸ் மாதுலா (Srinivas Maddula), சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.