மேலும்

பிரிவு: செய்திகள்

குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம்

புகலிடம் தேடிய, கணவனை சிறிலங்காவுக்கு நாடு கடத்தி இலங்கை தமிழ் குடும்பத்தைப் பிரித்த அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் செப்ரெம்பர் மாதம், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை

விடுதலைப் புலிகள் குறித்து அண்மையில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பாக, வட மாகாண முதலமைச்சரிடம் சிறிலங்கா காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஜோர்ஜியாவின் தலைநகரான ரிபிலிசியில் உள்ள சோட்டா ருஸ்டாவெலி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தார்.

நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர்

வடக்கில் செயற்படும் ஆவா குழு தீவிரவாத அமைப்பு அல்ல என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் அடுத்த ஆண்டுக்குள் அரச வேலைவாய்ப்பு

பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று, வேலைவாய்ப்பு பெறாமல் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும், நான்கு கட்டங்களாக அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சிறிலங்கா அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 18 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்ட நிலையில்,  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்

உலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை தொடர்ந்தும் உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா.

ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான  திணைக்கத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் மாரி யமாஷிடா சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.