ஜேவிபி மேதின பேரணியில் இந்திய, சீன பிரதிநிதிகள்- சமநிலைப்படுத்த முயற்சி
கொழும்பு காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தி நடத்திய மேதினப் பேரணியில் இந்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
கொழும்பு காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தி நடத்திய மேதினப் பேரணியில் இந்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தமது தூதரக வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்கள், குறித்துப் பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்றைய மேதினப் பேரணியில் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை நீக்குமாறு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
பிறிக்ஸ் (BRICS) கூட்டணியில் சிறிலங்கா இணைந்து கொள்வதற்கு, உதவத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில், பொதுமக்களின் நிலங்களில் கட்டப்பட்டுள்ள மதத் தலங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கும், வழிமுறையைக் கையாளப் போவதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று கொழும்பில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
ஐந்தாவது, பாகிஸ்தான்-சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல், நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. இந்தக் கலந்துரையாடல், ஏப்ரல் 28ஆம் திகதி முதல், 30ஆம் திகதி வரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையைப் பெற, சிறிலங்கா சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என, சர்வதேச நாணய நிதியத்தின், சிறிலங்காவுக்கு கடன் வழங்கும் குழுவின் தலைமை அதிகாரி இவான் பபஜெர்ஜியோ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றாதமை குறித்து, ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு கவலை வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்திடம், உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.