பாதுகாப்பு உடன்பாட்டை வெளியிட இந்தியாவின் இணக்கம் தேவை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு, இந்தியாவின் இணக்கம் தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.