மேலும்

நாள்: 13th May 2025

பிரதமருக்கு எதிரான விசாரணை – தட்டிக்கழிக்கும் ஆணைக்குழு, காவல்துறை

தேர்தல் பரப்புரைக் காலத்தில், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறையை மீறியது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவும், சிறிலங்கா காவல்துறையும் தட்டிக்கழித்துள்ளன.

கனடா தமிழினப் படுகொலை நினைவகம் – கொந்தளிக்கிறார் நாமல்

கனடாவில் தமிழினப் படுகொலை நினைவகம், திறக்கப்பட்டிருப்பது குறித்து தனது சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இதுதொடர்பாக சிறிலங்கா அரசு உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தாயகம் எங்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, இன அழிப்பை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

போதைப்பொருள் குற்றச்சாட்டு – வசமாக சிக்கினார் பிரதி அமைச்சர் சதுரங்க

தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சிகள், வாக்காளர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்ததாக,  பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியிருப்பது குறித்து,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு ஜப்பான் தயாரில்லை

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சிறிலங்காவில் அதிக வரி விதிக்கப்படுவதாக, ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா கவலை வெளியிட்டுள்ளார்.

ஆட்சியமைக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தி

பெரும்பான்மை பலத்தைப் பெறாத உள்ளூராட்சி  சபைகளின் ஆட்சியை கைப்பற்ற, தேசிய மக்கள் சக்தி, குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஒட்டாவாவில் உள்ள தூதரகத்திடம் விபரம் கோருகிறது வெளிவிவகார அமைச்சு

கனடாவின், பிராம்ப்டன் நகரில், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ள நிகழ்வு குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விபரங்களைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.