வல்வெட்டித்துறை நகரசபை தமிழ் தேசிய பேரவை வசமானது
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலின் வட்டார அடிப்படையிலான முடிவுகள் தெரியவந்துள்ள நிலையில், தமிழ் தேசிய பேரவை (மிதிவண்டி) 7 வட்டாரங்களையும், தமிழரசுக் கட்சி 2 வட்டாரங்களையும் கைப்பற்றியுள்ளது.
இதன்படி, மயிலியதனை, சிவன்கோவில், ஆதிகோவிலடி, ரேவடி, வல்வெட்டி வடக்கு, பொலிகண்டி, வல்வெட்டித்துறை நகரம் ஆகிய வட்டாரங்களில், எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி, கொம்மந்தறை, தொண்டைமானாறு ஆகிய இரண்டு வட்டாரங்களில் வெற்றிபெற்றுள்ளது.
அதேவேளை, இறுதி ஆசனப் பகிர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசிய பேரவைக்கு 7 ஆசனங்களும், தமிழரசு கட்சிக்கு 5 ஆசனங்களும், தேசிய மக்கள் சக்திக்கு 3 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
இதனால், வல்வெட்டித்துறை நகர சபையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
