மகிழ்வுடன் மீண்டும் இணைகிறோம்.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், ‘புதினப்பலகை’ மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறது.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், ‘புதினப்பலகை’ மீண்டும் உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறது.
அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த – இது போன்றதொரு நாளில் தான், ‘புதினப்பலகை’ நிறுவுனரும் ஆசிரியருமான கி.பி.அரவிந்தன் அவர்களை நாம் இழந்தோம்.
தாயகக் கனவு சுமந்து, சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளுவோம்.
சிங்களப் பேரினவாத அரசுடன், உலகம் முழுதும் இணைந்து நடத்திய, முள்ளிவாய்க்கால் பேரூழியில், உயிரையும், உடலையும், இனத்தின் விடுதலைக்காகக் கொடுத்து, மண்ணில் விதையான அனைவரையும் இந்நாளில் நினைவில் கொள்வோம்.
ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைப் போராளியாக, அரசியல் போராளியாக, ஆயுதப் போராளியாக, ஊடகப் போராளியாக, இலக்கியப் போராளியாக, பலமுனைகளில் தடம் பதித்த கி.பி.அரவிந்தன் அவர்கள் மறைந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் கொடிய கரங்களால், ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகி ஒன்பது ஆண்டுகள்.
நேற்றுப்போல் இருக்கிறது…… அரவிந்தன் அண்ணாவின் வார்த்தைகள். அவர் மறைந்தே இன்றுடன் மூன்று ஆண்டுகளாகி விட்டன.
ஈழக்கனவு சுமந்து சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளும் நாள்.
2009 நொவம்பர் மாதம் 17ஆம் நாள். முள்ளிவாய்க்கால் பேரழிவு, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் சமூக வாழ்வைப் புரட்டிப் போட்டிருந்த சூழலில் தொடங்கிய ஓட்டம் இது.
ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் மானிடம் சுடரும் விடுதலைப் பாதையில் உயிர்த்த ஈழத்து நவீன நாடக முன்னோடி, மனிதக்கூத்தின் மாமகுடம். ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர்.