மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்துடனான தொடர்பு- வரலாற்று வேர்களை அல்லைப்பிட்டியில் தேடுகிறது சீனா

பண்டைக்காலத்தில்  சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருந்த கடல்வழி வணிகத் தொடர்புகள் குறித்து, சீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், அல்லைப்பிட்டியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் – ஆளுனர் பரிந்துரை

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்கு, மாகாண அமைச்சர்கள் தாமாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று  வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுக மீள்கட்டுமான திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார் மைத்திரி

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

யாருடன் கூட்டு என்று தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே முடிவு – விக்னேஸ்வரன்

வட மாகாண சபைத் தேர்தலில் யாருடன் கூட்டுச் சேருவது என்று,  தேர்தல் அறிவிக்கப்படும் போதே தீர்மானிக்கப்படும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோட்டை இராணுவத்துக்கே சொந்தம் – என்கிறார் சிறிலங்கா இராணுவத் தளபதி

கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவுகூரப்பட்டது.

வடக்கிலுள்ள சிறிலங்கா படைமுகாம்கள் மூடப்படாது – ரணில்

வடக்கில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் எதுவும். உடனடியாக அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு வங்கிகளில் 100 பில்லியன் ரூபா – குறிவைக்கும் சிறிலங்கா பிரதமர்

வடக்கில் உள்ள வங்கிகளில் 100 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் 147 சிறிலங்கா படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறிலங்காப் படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா நம்பகமான பங்காளர் – மோடி புகழாரம்

சிறிலங்கா ஒரு அயல்நாடாக மாத்திரமன்றி, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் குடும்பத்தில் மிகவும் சிறப்பான, மற்றும் நம்பகரமான ஒரு பங்காளராகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.