மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

கிழக்கில் இராணுவத்தின் கீழ் ‘கொரோனா’ தடுப்பு மையங்கள்

வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது.

இலங்கையர்கள் நுழைவதற்கு தடைவிதித்தது கட்டார்

சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இன்று தொடக்கம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

அம்பிகா, சசிகலாவை யாழ்ப்பாணத்தில் களமிறக்கும் தமிழ் அரசு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பெண் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் அரசியல்வாதியை கொல்லச் சதி? – வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடக்கில் உள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் ஆறு முக்கிய முன்னாள் போராளிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பில் இணையவில்லை – சுரேன் ராகவன் மறுப்பு

பொதுத் தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருப்பதாக வெளியான செய்திகளை, வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மறுத்துள்ளார்.

இத்தாலியில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு

இத்தாலியில் இருந்து சிறிலங்காவுக்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படவுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 25இல் பொதுத் தேர்தல் – அடுத்த வாரம் வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 25ஆம் நாள் நடைபெறும் என்று தேசிய தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு அரசிதழ் – அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைப்பு

இன்று நள்ளிரவுடன் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அரசிதழ் அறிவிப்பு அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

18 ஆண்டு மோதலுக்கு முடிவு – தலிபான்களுடன் அமெரிக்கா உடன்பாடு

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும்  இடையில் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சை வசப்படுத்த விஜேதாச மூலம் வியூகம் வகுக்கும் கோத்தா

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு ஏதாவது அமைச்சுக்களையும் சிறிலங்கா அதிபர் தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.