நல்லூர் துப்பாக்கிச் சூடு – சரணடைந்தார் பிரதான சந்தேக நபர்
நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்று சிறிலங்கா காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்று சிறிலங்கா காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை மாலை, நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் செல்வராசா ஜெயந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபன பணியாளர்கள் நேற்று நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதால், பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முக்கிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரை, தமது பக்கம் இழுப்பதற்கு பசில் ராஜபக்ச மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு ஒன்று உதவி வழங்கி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகப் பகுதியில் விமான நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை, பெருநகர மற்றும் மேல்மாகாண அபி்விருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால செயற்பாடுகளை தமக்கு நினைவுபடுத்துவதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, ஆற்றில் குதித்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானதை அடுத்து, மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொதுமக்களுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாத்தலும் மேம்படுத்தலும் தீவிரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் ஜூலை 10 தொடக்கம் 14 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.