மேலும்

நாள்: 2nd July 2017

கொழும்பில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டமா?

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, எந்த தகவலும், தமக்குக் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

“நான் இனவாதி அல்ல” – முதலமைச்சர் விக்னேஸ்வரன் செவ்வி

வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சாராரால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விபரிக்கிறார்.

போரின் இறுதியில் அமெரிக்காவின் மீட்புத் திட்டத்தை சிறிலங்கா சாகடித்தது – பிளேக்

போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, சிறிலங்கா அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற,  விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக, சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் அதாவுல்லா? – தேடி வந்த பதவியை பசீர் நிராகரிப்பு

கிழக்கு மாகாண ஆளுனராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் 9 இரட்டைக் குடியுரிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் – உதய கம்மன்பில

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மேலும் 9 இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும், அவர்களின் பெயர்களை அம்பலப்படுத்தப் போவதாகவும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மாலிக்கு அனுப்பப்படவுள்ள சிறிலங்கா படையினர் குறித்து ஐ.நா அதிகாரிகள் பேச்சு

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும், அமைதிப்படையினருக்கான பயிற்சிகள் தொடர்பாகவும், ஐ.நா அதிகாரிகள் நேற்று முன்தினம் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா அதிபரின் செயலராக செவ்வாயன்று பதவியேற்கிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபரின் செயலராக, மூத்த சிவில் சேவை அதிகாரியும், கிழக்கு மாகாண ஆளுனருமான ஒஸ்ரின் பெர்னான்டோ வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகளை நாளை விடுவிக்கிறது சிறிலங்கா இராணுவம்

வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள 54 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.