மேலும்

நாள்: 20th July 2017

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் – வெற்றி பெற்றார் ராம்நாத் கோவிந்த்

இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் நாள் நடந்த தேர்தலில் இவர் 66.65 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

சம்பந்தனைச் சந்தித்தார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தமிழ் அகதிகளுக்கு குடியேறும் வாய்ப்பை மறுக்கும் அமெரிக்காவின் தேசப்பற்று சட்டம்

நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், அமெரிக்காவின் தீவிரவாத சட்டத்தினால் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இரண்டு நிதிக் கொடைத் திட்டங்களுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவின் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நிதியுதவி வழங்கவுள்ளது.

அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி

அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் ஐ.நாவின் அரசியல் விவகாரச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா படையினரைப் போலவே ஏனைய நாட்டுப் படையினரும் ஆய்வு– ஐ.நா

ஐ.நா அமைதிப்படைக்கு படையினரைச் சேர்த்துக் கொள்ளும் போது, சிறிலங்கா படையினருக்கு கையாளப்படும் வழிமுறைகள் ஏனைய நாடுகளின் படையினரை சேர்க்கும் போதும் கையாளப்படும் என்றும், அவர்கள் தமது நாடுகளில் எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் முதல் வெளிவிவகார அமைச்சர் பிறந்த வீட்டைப் பார்வையிட்டார் விவியன்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், சிங்கப்பூரின் முதலாவது வெளிவிவகார அமைச்சராகவும், பிரதிப் பிரதமராகவும் இருந்த சின்னத்தம்பி இராஜரட்ணம் பிறந்த வீட்டுக்குச் சென்றிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் – பல்வேறு நிகழ்வுகள், சந்திப்புகளில் பங்கேற்றார்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

கேப்பாப்புலவு: 5 மில்லியன் ரூபாவை வாங்கி விட்டு காலை வாரியது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், பொதுமக்களின் 189 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறிலங்கா இராணுவம் ஏமாற்றியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டது போல, நேற்று காணிகள் விடுவிக்கப்படவில்லை என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.