மேலும்

நாள்: 25th July 2017

தமிழீழ இசைக் கல்லூரி பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு ஆயுள்தண்டனை

தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்துத்  தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்காவுக்கு தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுப்போம்- பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக தாம் சிறிலங்காவுக்குத் தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கப் போவதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் ஸ்கல்லி தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.

நீதிபதியின் இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரியின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி

நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த- சிறிலங்கா காவல்துறை அதிகாரியான சரத் பிறேமச்சந்திரவின் உடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

நல்லூர் துப்பாக்கிச் சூடு – சரணடைந்தார் பிரதான சந்தேக நபர்

நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்று சிறிலங்கா காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டார்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை மாலை, நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் செல்வராசா ஜெயந்தன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெற்றோலிய கூட்டுத்தாபன பணியாளர்கள் வேலைநிறுத்தம் – இருளில் மூழ்கப்போகும் சிறிலங்கா

சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபன பணியாளர்கள் நேற்று நள்ளிரவு தொடக்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதால், பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பு

முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று முக்கிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

ஆளும்கட்சியை உடைக்க பசிலுக்கு உதவும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு

சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரை, தமது பக்கம் இழுப்பதற்கு பசில் ராஜபக்ச மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பு ஒன்று உதவி வழங்கி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் விமான நிலையம் அமைக்க திட்டம்

கொழும்பு துறைமுகப் பகுதியில் விமான நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தை, பெருநகர மற்றும் மேல்மாகாண அபி்விருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.