மேலும்

நாள்: 10th July 2017

வடமராட்சியில் வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு காவல்துறைக்கு எதிர்ப்பு – காலையில் மீண்டும் பதற்றம்

மணல்காட்டில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் ரயர்கள் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மணல்காடு துப்பாக்கிச் சூடு – அதிகாரி உள்ளிட்ட இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கைது

மணல்காடு பகுதியில் நேற்று சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உதவி ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணல்காடு துப்பாக்கிச் சூடு – கொழும்பில் இருந்து சிறப்பு விசாரணைக் குழு யாழ். விரைந்தது

மணல்காடு பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைப் பிரிவு ஒன்றை, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியாவிடம் வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் சிறிலங்கா கடற்படைத் தளபதி இறுதிக்கட்ட ஆய்வு

இந்தியாவிடம் கொள்வனவு செய்யப்படும், ஆழ்கடல் ரோந்துக் கப்பலை அதிகாரபூர்வமாக சிறிலங்காவிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி அதனை இறுதிக்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தினார்.

சென்னை அருகே தொடங்கியது அதிநவீன போர்க்கப்பல்களின் பாரிய கூட்டுப் பயிற்சி

மலபார் பயிற்சி எனப்படும், இந்திய, அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகளின் பாரிய  கூட்டுப் போர் ஒத்திகை, வங்காள விரிகுடாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டை அடுத்து வடமராட்சியில் பதற்றம் – சிறப்பு அதிரடிப்படை குவிப்பு

வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள காவல்துறையினரின் காவலரணும், நெல்லியடியில் காவலர் ஒருவரின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

மகாநாயக்கர்களுடன் இப்போது சந்திப்பு இல்லை – சுமந்திரன்

பௌத்த பீடாதிபதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகச் சந்திக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.