மேலும்

நாள்: 1st July 2017

அமைச்சர்கள் – பிக்குகள் இழுபறியால் இராணுவத் தளபதி நியமனத்தில் தாமதம்

அமைச்சர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையிலான இழுபறியினாலேயே, சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசியாவின் மிக உயரமான இரட்டைக் கோபுரம் – கொழும்பில் அமைக்க உடன்பாடு கைச்சாத்து

ஆசியாவின் மிக உயரமானதும், உலகின் ஒன்பதாவது உயரமானதுமான இரட்டைக் கோபுரக் கட்டடம் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் அமைக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபரின் செயலராகிறார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதில் இருந்து. அவரது செயலராக பி.பி.அபயகோன் பதவி வகித்து வந்தார்.

இராணுவத் தளபதியாகும் வாய்ப்பை இழக்கும் நிலையில் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ள போதிலும், ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இன்னமும் இராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகவில்லை என்று, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதற்கான முட்டுக்கட்டை அகன்றது

அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனுடன் இணைந்த 15 ஆயிரம் ஏக்கர் காணியில் கைத்தொழில் பூங்காவையும் அமைப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம்  இரண்டு சீன நிறுவனங்களுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை சிறிலங்கா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பொத்துவில், புத்தளத்தில் ராடர்களைப் பொருத்த ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவி

சிறிலங்காவில் காலநிலை பற்றிய தகவல்களை தரக்கூடிய ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கு, ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

சிறிலங்காவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி – இந்திய தூதுவர்

சிறிலங்கா மக்களின் நலன் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக தொடர்ந்தும் செயற்படுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் திருகோணமலையில் மகிந்த அணியின் அரச எதிர்ப்புப் பேரணி

சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.