மேலும்

நாள்: 3rd July 2017

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

27 ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.

புதிய அரசியலமைப்பு தேவையில்லை – அஸ்கிரிய பீடம்

தற்போது புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லை என்று அஸ்கிரிய பீடத்தின் காரக்க சங்க சபா தெரிவித்துள்ளது.

சிவராம் கொலையுடன் தொடர்பில்லை – முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் சிவநேசன்

ஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக தம்மை யாரும் விசாரணை செய்யவில்லை என்றும்,  வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென் மரணம்

இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரும், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவருமான நிருபம் சென் புதுடெல்லியில் நேற்று காலமானார்.

சிறிலங்கா அதிபரின் நிரந்தரச் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமனம்

சிறிலங்கா அதிபரின் நிரந்தரச் செயலராக, சிறிலங்காவின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியான ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு ஆளுனராக ஏ.எஸ்.பி.லியனகே? – அவசரமாக கட்டாரில் இருந்து திருப்பி அழைப்பு

கிழக்கு மாகாண ஆளுனராக வர்த்தகரும், கட்டாருக்கான தூதுவராகப் பணியாற்றுபவருமான ஏ.எஸ்.பி.லியனகே நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 மாகாணசபைகளுக்கு வேட்புமனுக் கோரும் வர்த்தமானி ஒக்ரோபர் 2ஆம் நாள் வெளியாகும்

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்களைக் கோரும் வர்த்தமானி அறிவித்தல், ஒக்ரோபர் 2ஆம் நாள் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.