பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்- நான்காவது நபருக்கு பிடியாணை
மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் மற்றும் இரண்டு பேர் வரும் 15 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


