மேலும்

நாள்: 22nd July 2017

ஜப்பானிய போர்க் கப்பலில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஜப்பானிய கடற்படையின் போர்க்கப்பல்களை, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்

அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா இராணுவத் இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் இராணுவத் தலைமை அதிகாரியாக (Chief of Staff)  மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நேற்றுமாலை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்கு சிறிலங்கா அதிபர், பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அரசை விட்டு வெளியேறவுள்ள அமைச்சர்கள் அடுத்த வாரம் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

தற்போதைய கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அடுத்தவாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர்.