மேலும்

நாள்: 9th July 2017

வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் பலியானதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்கு தமிழிசைக்குத் தடை விதித்த பாஜக மேலிடம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், பாஜக மேலிடத்தின் உத்தரவினால், அந்தப் பயணத்தை கைவிட்டு அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார்.

தேங்காயை இறக்குமதி செய்யும் பரிதாப நிலையில் சிறிலங்கா

தேங்காய் கொள்கலன் ஒன்றை பரீட்சார்த்த அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு சிறிலங்காவின் பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.

இந்தியாவினதும் பாஜகவினதும் ஆதரவைக் கோரினார் வடக்கு மாகாண முதல்வர்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கும், தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதற்கும், இந்திய மத்திய அரசாங்கத்தினதும், பாஜகவினதும் ஆதரவை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருக்கிறார்.

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துக்கு சேவை நீடிப்பு

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசத்துக்கு வரும் செப்ரெம்பர் மாதம் வரையில், சேவை நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இதற்கான அனுமதியை அளித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியின் எதிர்ப்பை சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்கா கடற்பரப்பில் அடிமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறையைத் தடைசெய்யும் நாடாளுமன்றத் தீர்மானத்துக்கு, தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்துள்ள எதிர்ப்பை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நீக்கப்படாது – சிறிலங்கா பிரதமர்

தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக, புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்கப் போவதில்லை என்று பௌத்த பீடங்களுக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு குழு மகாநாயக்கர்களைச் சந்திக்கிறது

சிறிலங்காவின் முன்னணி பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழு சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.