மேலும்

நாள்: 4th July 2017

maithri-austin fernando (1)

சிறிலங்கா அதிபரின் செயலரானார் ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபரின் செயலராக, ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை நடந்த நிகழ்வில்,  அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஒஸ்ரின் பெர்னான்டோ நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

maithri- kapila waithyaratna

போர்க்குற்ற வழக்குகளில் அனுபவமுள்ள கபில வைத்தியரத்ன பாதுகாப்புச் செயலராக நியமனம்

மூத்த மேலதிக சொலிசிற்றர் ஜெனரலும், அதிபர் சட்டவாளருமான, கபில வைத்தியரத்ன, சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

maithri-rohitha (1)

கிழக்கு மாகாண ஆளுனராக றோகித போகொல்லாகம நியமனம்

கிழக்கு மாகாண ஆளுனராக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக ஒஸ்ரின் பெர்னான்டோ இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

maithri-mahesh (1)

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

us-embassy-colombo

புலனாய்வு விவகாரங்கள் குறித்து கருத்து வெளியிட முடியாது – அமெரிக்க தூதரகம்

புலனாய்வு விவகாரங்கள் தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Major General Dharshana Hettiarrachchi

புலிகளின் மீள் எழுச்சி அச்சுறுத்தல் கிடையாது – யாழ். படைகளின் கட்டளை தளபதி

விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறக் கூடிய அச்சுறுத்தல் கிடையாது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

eagle-flag-usa

கொழும்பு முச்சக்கரவண்டி சாரதிகள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

சிறிலங்காவில் அமெரிக்க குடிமக்கள்- குறிப்பாக பெண்கள், முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு, அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருந்த எச்சரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

Austin-fernando

முழுமையான நல்லிணக்கம் இன்னமும் ஏற்படவில்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ

சிறிலங்காவில் இன்னமும் முழுமையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவில்லை என்று கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகி- சிறிலங்கா அதிபரின் செயலராகப் பதவியேற்கவுள்ளவரான ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

mahinda-trinco (1)

ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்பை அறிமுகப்படுத்த திட்டம் – மகிந்த குற்றச்சாட்டு

நாட்டில் ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியலமைப்பை அறிமுகப்படுத்த, தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

Karunasena Hettiarachchi

பதவி விலகவுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி விரைவில் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.