மேலும்

நாள்: 15th July 2017

இராஜதந்திர தகைமையோ, அடிப்படை நாகரீகமோ இல்லாதவர் – ஐ.நா நிபுணரை சாடும் விஜேதாச

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எந்வொரு இராஜதந்திர தகைமையையோ, அடிப்படை நாகரீகத்தைக் கொண்டவரோ அல்ல என்று சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகளை நடத்த சிறிலங்கா தவறிவிட்டது – ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு

போரின் போது சிறிலங்கா படையினர் மற்றும் தமிழ்ப் போராளிகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக அனைத்துலக சமூகத்துக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.நா அறிக்கையாளர்- சிறிலங்கா அமைச்சர் இடையே கடும் வாக்குவாதம்

சிறிலங்காவில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு விடயத்தில் ஐ.நாவின் தலையீடுகள் தொடர்பாக, கொழும்பு வந்திருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளருக்கும் சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

நாரஹேன்பிட்டி விகாரையில் அரசியல் செயற்பாடுகளுக்கு நீதிமன்றம் தடைவிதிப்பு

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொருத்து வீட்டுத்திட்டத் திட்ட உடன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றில் மனு

வடக்கு, கிழக்கில் உலோகத்தினால் ஆன பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பாக, பிரெஞ்சு நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு உடன்பாட்டையும் செய்து கொள்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசில் இணைந்திருப்பதா என்று மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு – டிலான் பெரேரா

கூட்டு அரசாங்கத்தில் இணைந்திருப்பதா இல்லையா என்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

விரைவில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை

அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு விரைவில் தனது அறிக்கையை வெளியிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 வரை நிறுத்தி வையுங்கள் – சிறிலங்கா அதிபர் கோரிக்கை

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம், அதன் தலைவரும், சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.