மேலும்

நாள்: 7th July 2017

சம்பூர் பெருநிலப்பரப்பில் நடந்தேறிய இனப்படுகொலை (07.07.1990)

வீரம் கொழித்த மறவர் வாழும் வீரநிலம் சம்பூர். இங்கு இரத்த சகதியும் மரண ஓலமும் நிரம்பி வழிந்த நாள் இது.  சிங்கள பௌத்த இராணுவத்தாலும், அவர்களோடு இயங்கிய கூலிப்படைகளாலும் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்ட கோரம்  நடந்தேறி இன்றுடன் இருபத்தேழு ஆண்டுகள்.

இன்று மகிந்தவைச் சந்திக்கவுள்ள 8 பிரதியமைச்சர்கள்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எட்டு பிரதி அமைச்சர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்று கொழும்பு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பளிக்கும் சட்டமூலம் விலக்கப்பட்டது ஏன்?- மகிந்த சமரசிங்க

பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம், மேலும் ஆய்வுகள் செய்யப்பட்டு, கலந்துரையாடப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்

மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் அடுத்தவாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்றார் கபில வைத்தியரத்ன

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்ட, கபில வைத்தியரத்ன நேற்று பாதுகாப்பு அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மகாநாயக்கர்களிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஒற்றையாட்சித் தன்மைக்கோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாது. மகாசங்கத்துடன் கலந்துரையாடப்பட்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று  மகாநாயக்க தேரர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார்.