மேலும்

மாதம்: August 2017

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு தொடங்கியது – முன்வரிசையில் சம்பந்தன், சுமந்திரன்

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் இன்று மாலை ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், பங்கேற்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், இன்று பிற்பகல் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

தனக்கெதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படாது என்று ஐ.நாவிடம் உறுதிமொழி பெற வேண்டுமாம்

தனக்கு எதிராக அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படாது என்று ஐ.நாவிடம் உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜெனரல் ஜயசூரியவை அனைத்துலக நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

பிரேசிலை விட்டுத் தப்பிச் சென்ற சிறிலங்கா தூதுவரான, ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்கை, ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான, போல் ஸ்கலி தெரிவித்துள்ளார்.

போரில் நடந்த சம்பவங்கள் எல்லாம் போர்க்குற்றங்கள் இல்லை- சிறிலங்கா அரசு

உறுதியான ஆதாரங்கள் இருந்தால் மாத்திரமே, இராணுவ கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த எவர் மீதும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் இயற்கை எரிவாயு மின் திட்டம்- சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா

அம்பாந்தோட்டையில், இயற்கை எரிவாயு மின் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக, சீனாவுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சம்பந்தன்

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை சிறிலங்காவில்  முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

பிரேசில் போர்க்குற்ற வழக்கை உன்னிப்பாக கவனிக்குமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு தொடர்பான விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிடப் போவதாக  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார செயலர் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார செயலர் எஸ்.ஜெய்சங்கர்  நேற்றுமாலை கொழும்பை வந்தடைந்துள்ளார். கொழும்பில் இன்று ஆரம்பமாகும் இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்கவே அவர் சிறிலங்கா வந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் காணாமல் சிறிலங்காவில் ஆக்கப்பட்டவர்களுக்காக, நினைவு தீபம் ஏற்றினார்.