மேலும்

நாள்: 21st July 2017

சீனாவின் கொழும்பு துறைமுக நகரத்தை வடிவமைக்கிறது அமெரிக்க நிறுவனம்

சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான துறைமுக நகரத்தை, அமெரிக்காவின் பிரதான கட்டட வடிவமைப்பு நிறுவனமான, ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலருடன் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பென்ட்மனை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

காணாமல்போனோர் பணியகம்- ஐ.நா பொதுச்செயலர் பாராட்டு

காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் ‘மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள்’ பட்டியலில் சிறிலங்கா

சிறிலங்காவை மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இணைத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில், 30 நாடுகளை, மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணர் – புலிச்சந்தேக நபர்கள் சந்திப்பு விதிமுறைகளுக்கு அமையவே நடந்தது – ரவி கருணாநாயக்க

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்ட விடயத்தில், முன்னைய அரசாங்கத்தின் நடைமுறைகளே பின்பற்றப்பட்டன என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோகும் – எச்சரிக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

லலித் ஜெயசிங்கவை சேவையில் இருந்து இடைநிறுத்த தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க சிறிலங்கா காவல்துறையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல்

பாரிய உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல் உள்ளிட்ட ஜப்பானிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்து – அமெரிக்கா, கனடா, ஐ.நா வரவேற்பு

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டிருப்பதற்கு அமெரிக்கா, கனடா மற்றும் ஐ.நா என்பன வரவேற்புத் தெரிவித்துள்ளன.

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டார் சிறிலங்கா அதிபர்

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக அவர். கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில், காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இன்று கையெழுத்திட்டேன். இது நிலையான அமைதிக்கான பாதையில் சிறிலங்காவின் முன்னேற்றத்துக்கான மற்றொரு படியைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.