மேலும்

நாள்: 5th July 2017

ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை

கொழும்பில் மூத்த ஊடகவியலாளர் மெல் குணசேகரவைக் கொலை செய்த 39 வயதுடைய குற்றவாளிக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அமெரிக்க தூதரகத்துக்கான அச்சுறுத்தல் – விசாரணைக்கு உத்தரவு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டமூலம் கைவிடப்பட்டது

காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடனம் பற்றிய சட்டமூலம், மீதான நாடாளுமன்ற விவாதத்தை சிறிலங்கா அரசாங்கம் கைவிட்டுள்ளது.

மனோ கணேசன்- சுமந்திரன் கடும் வாக்குவாதம் – இடையில் நின்றது வழிநடத்தல் குழுக் கூட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றம் வராது?

பலவந்தமாக ஆட்களைக் காணாமல் போகச் செய்வதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பு இல்லை என்று நாடாளுமன்ற உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும் மகாநாயக்கர்கள் எதிர்ப்பு

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கும், சிறிலங்காவின் பௌத்த பீடங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மைத்திரியை இலக்கு வைத்தவருக்கு அடைக்கலம் கொடுத்த 62 வயதுப் பெண்ணுக்கு சிறைத்தண்டனை

தற்போதைய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2008 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராக இருந்த போது, அவரைக் கொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட 62 வயது பெண் ஒருவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆளுனர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் – பதவி விலகுகிறார் கட்டாருக்கான தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே

கிழக்கு மாகாண ஆளுனர் பதவியை எதிர்பார்த்திருந்த கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே, அந்தப் பதவி கிடைக்காததையடுத்து, தனது தூதுவர் பதவியை விட்டு விலகவுள்ளார்.

புதிய அரசியலமைப்போ, திருத்தமோ தேவையில்லை – பௌத்த பீடங்கள் கூட்டாக அறிவிப்பு

புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ தேவையில்லை என்று, செல்வாக்குமிக்க மூன்று பௌத்த பீடங்களான- சியாம், அமரபுர, ராமன்ய,  நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும், ஏனைய சங்க சபாக்களும் ஒரு மனதாக நேற்று தீர்மானித்துள்ளனர்.