மேலும்

நாள்: 27th July 2017

விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ரத்துச் செய்துள்ள போதிலும், தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

‘நெருக்கடியான நேரத்தில் சீனா உதவியது’ – சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

தீவிரவாதத்தைத் தோற்கடிக்க உதவிய சீனாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. கொழும்பு, காலிமுகத்திடல் விடுதியில் நேற்றிரவு நடந்த, சீன இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டு வரைவு நாடாளுமன்றில் – இராணுவ செயற்பாடுகளுக்கு தடை

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் எந்தவொரு இராணுவ செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தடை விதிக்கும் வகையிலேயே, சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஒரே நாளில் மாகாணசபைகளுக்குத் தேர்தல் – புதிய சட்டம் கொண்டு வருகிறது அரசாங்கம்

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் இடைநிறுத்தம் – விலகியது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து  பெற்றோலிய ஊழியர் தொழிற்சங்கங்கள், தமது போராட்டத்தை வரும் ஓகஸ்ட் 01ஆம் நாள் வரை இடைநிறுத்தியுள்ளன.