மேலும்

நாள்: 29th July 2017

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு – சீன நிறுவனத்துடன் சிறிலங்கா கைச்சாத்து

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70 வீத உரிமையை சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும் உடன்பாடு இன்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது.

சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக பிரசாத் காரியவசம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக, பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வொசிங்டனுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றிய வந்த இவர், வெளிவிவகார அமைச்சின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

சம்பந்தனிடம் விடைபெற்றார் கனடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்

கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும், அம்மையார் நேற்றுக்காலை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டார்.

8 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதியைத் தேடும் தமிழ்ப் பெண்கள் – அனைத்துலக அமைப்பு அறிக்கை

போர் முடிவுக்கு வந்த எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள் போர்க்கால மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் நீதியைத் தேடி அலைந்து கொண்டிருப்பதாக, அனைத்துலக முரண்பாட்டுக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு பாதகமல்ல – ரணில்

இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானது. இது சிறிலங்காவுக்குப் பாதகமாக இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிராந்தியும், யோசிதவும் விசாரணைக்கு வராமல் நழுவினர்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைக்காக நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டிருந்த சிராந்தி ராஜபக்சவும், யோசித ராஜபக்சவும், முன்னிலையாகவில்லை.

ஓகஸ்ட் 4ஆம் நாள் வித்தியா கொலை வழக்கின் மிக முக்கிய சாட்சியப்பதிவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் நாள் நடைபெறவுள்ள  தீர்ப்பாயத்தின் அமர்வில் அளிக்கப்படவுள்ளது.