மேலும்

மாதம்: July 2017

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இவரா?

நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று நம்பப்படும் ஒருவர் தப்பிச் செல்லும் காட்சி என்று கூறப்படும் ஒளிப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தியாவில் கட்டப்பட்ட ‘சயுரால’ போர்க்கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படுகிறது

இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் சிறிலங்கா கடற்படைக்காக கட்டப்பட்ட ‘சயுரால’ என்று பெயரிடப்பட்டுள்ள ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நாளை கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது.

சைப்ரசில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை

சைப்ரஸ் நாட்டின் லிமாசோல் நகரில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஆறாவது மாடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிலேயே இந்தக் கொலை நடந்துள்ளது.

சிக்கலான விடயங்களைப் பிற்போடுவதற்கு சம்பந்தன்- விக்கி சந்திப்பில் இணக்கம்

சிக்கலை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்களை தள்ளிப் போடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் முடிவு செய்துள்ளனர். கொழும்பில் நேற்று நடந்த சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நம்பகமான பொறுப்புக்கூறலை வலியுறுத்துகிறார் கனடியப் பிரதமர்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் இடம்பெற வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே வலியுறுத்தியுள்ளார். கறுப்பு ஜூலை நினைவுகூரலை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் கொப்பேகடுவவின் மரணம் – மீள் விசாரணை கோருகிறார் மல்வத்த பீடத்தின் அனுநாயக்கர்

அராலித்துறையில் லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட உயர்மட்ட படை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை நடத்தப்பட்டு, அதன் கண்டறிவுகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்கா செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை

சிறிலங்கா செல்லும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வடக்கில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் அறிவிப்பு

யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து வடக்கில் இன்று தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடலில் தத்தளித்த 2 யானைகளை மீட்டது சிறிலங்கா கடற்படை

திருகோணமலை கடலில் நேற்றுக்காலை தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு யானைகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டு, பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்தனர்.

கறுப்பு யூலை நினைவுகளுடன் விடுதலை நோக்கிய செயற்பாடுகளை உறுதியுடன் முன்னெடுப்போம்

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் இடம் பெற்ற கறுப்புயூலை தமிழின அழிப்பின் 34வது ஆண்டு நினைவை உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து நினைவேந்திக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துக் கொண்டுள்ளது.