மேலும்

நாள்: 8th July 2017

சிறிலங்காவுக்கு சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீர் வீழ்ச்சி

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா சுற்றுலா அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரொபேர்ட் நொக்ஸ் ரொஸ் நேற்றுக்காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை மீறி தமிழர்களுக்கு சுயாட்சி உரிமைகள் வழங்கப்படுமா? – ஏஎவ்பி

சிறிலங்காவின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ்மக்களுக்கு, சுயாட்சி வழங்கும், அரசியல் சீர்திருத்தத்துக்கு பௌத்த மதகுருமார்கள் எதிப்புத் தெரிவித்துள்ளனர்.

பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள்? – கோத்தாவிடம் கடிந்த அனுநாயக்க தேரர்

பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேதர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிடம் வாங்கும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலில் பயிற்சி பெறும் சிறிலங்கா கடற்படையினர்

இந்தியாவிடம் வாங்கப்படும் பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பலை  செலுத்தும் பயிற்சிகள் மற்றும் சோதனைகளில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக, அனைத்துலக பாதுகாப்பு ஊடகமான ‘ஜேன்ஸ் 360” செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கின் பிரதான சுற்றுலா கேந்திரமாக மாறுகிறது மன்னார்

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் பிரதான சுற்றுலா மையமாக மாற்றப்படவுள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலாத் துறை அமைச்சை மேற்கோள்காட்டி சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.

இனிமேல் எதேச்சாதிகார, இராணுவ ஆட்சிக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் இனிமேல் எதேச்சாதிகார ஆட்சிக்கோ, இராணுவ ஆட்சிக்கோ இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கால் வைக்கிறது சீன வங்கி

சீனாவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சீன வங்கி  (Bank of China), கொழும்பில் கிளை ஒன்றை இந்த ஆண்டில் ஆரம்பிக்கவுள்ளது.

சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்கள் திருட்டு – முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு அழைப்பாணை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை வெட்டி எடுத்து பழைய இரும்பாக விற்பனை செய்த மோசடி தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.