மேலும்

நாள்: 12th July 2017

11 தமிழர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைது

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெலிசறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனப் பொறியாளர்களால் புதுப்பிக்கப்பட்ட எவ்-7 போர் விமானங்கள் விமானப்படையிடம் கையளிப்பு

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள விமானங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் அலகு, முதல்கட்டமாக சீனத் தயாரிப்பான இரண்டு எவ்-7 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்குப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது.

முல்லைத்தீவுக்கு அப்பால் ஆழ்கடலில் தத்தளித்த யானை – கடற்படையினரால் மீட்பு

முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாயில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை ஒன்றை சிறிலங்கா கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

கூட்டமைப்பைச் சந்திப்பது மகிழ்ச்சி – அஸ்கிரிய பீட பதிவாளர்

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்க எடுத்துள்ள முடிவைப் பாராட்டுவதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளரும், அஸ்கிரிய சங்க சபாவின் மூத்த குழு உறுப்பினருமான வண. மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

11 தமிழர்கள் கடத்தல் – சிறிலங்கா கடற்படை அதிகாரியைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் லெப்.கொமாண்டர் தரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரைக் கைது செய்யுமாறு கோட்டே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலில் 30 வீதம் பெண் வேட்பாளர்களுக்கு இடமளிக்கும் சட்டத் திருத்தம்

மாகாணசபைகளில் பெண்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவத்தை அளிக்கும் வகையிலான, மாகாணசபைகள் திருத்தச் சட்டமூலம், நேற்றுமுன்தினம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக பொறுப்பேற்றுள்ள கபில வைத்தியரத்னவை, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும், துணைத் தூதுவருமான ரொபேர்ட் ஹில்டன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஒற்றையாட்சி முறையோ, பௌத்தத்துக்கான முன்னுரிமையோ மாற்றப்படாது – சிறிலங்கா அதிபர்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றுவதற்கோ பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நீக்குவதற்கோ எந்தவொரு சூழ்நிலையிலும் இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி துறைமுகத்தில் மிதக்கும் மின்உற்பத்தி நிலையம்

காலி துறைமுகத்தில் 100 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மிதக்கும் மின்சார நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இராணுவக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் திட்டம்- சிறிலங்கா அதிபருக்கு விளக்கினார் இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று முதல் முறையாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.