மேலும்

நாள்: 30th July 2017

கொக்குவிலில் வாள்வெட்டு – இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் படுகாயம்

கொக்குவில் பகுதியில் இன்று பிற்பகல் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி, கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர், படுகாயமடைந்தனர்.

மகிந்த ஆட்சிக்கு வந்ததும் அம்பாந்தோட்டை உடன்பாட்டை கிழித்தெறிவோம் – பசில் ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாடு கிழித்தெறியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடரும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்

அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தொடர்பாக பிரான்சிஸ் ஹரிசன்  The Diplomat ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

ஜூலை 29 : 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடன், இப்போது சீனாவுடன்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

ஐதேகவின் விருப்புக்கு மாறாக நடந்த புதிய வெளிவிவகாரச் செயலர் நியமனம்

ஐதேக தலைவர்களின் விருப்பங்களுக்கு முரணாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், புதிய வெளிவிவகாரச் செயலராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் உணர்வு இந்தியாவுக்கு உள்ளது – சம்பந்தன்

ஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு சுயாட்சி உணர்வையும், நாட்டுடன் இணைந்திருக்கும் உணர்வையும், நாடு தம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வையும் கொடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சம்பூரில் நிரந்தரமாக நிலைகொள்கிறது சிறிலங்காவின் மரைன் பற்றாலியன்

சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, மரைன் பற்றாலியன், திருகோணமலை சம்பூரில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியின் யாழ்ப்பாணத்துக்கான முதல் பயணம்

சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கட்சிகளின் செயலாளர்களுக்கான அவசர கூட்டம்- தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அழைப்பு

சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, கட்சிகளின் செயலாளர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் திணைக்களத்தில் வரும் ஓகஸ்ட் 4ஆம் நாள் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்திய-சிறிலங்கா ஒப்பந்தமும், இலங்கைத் தீவில் இந்தியாவின் 30 ஆண்டு இராஜதந்திரமும்

இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் ஈழத்தமிழ்த் தேசம் தனது விடுதலைப் போராட்டப் பாதையில் இந்நிகழ்வின் தாக்கத்தையும் அதனுடன் கூடவந்த இடர்களையும் அழிவுகளையும் அசைபோட்டுப் பார்க்க வேண்டிய நிலையிலுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.