யாழ்., கொழும்பு மாநகரசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு
யாழ்ப்பாணம், கொழும்பு மாநகரசபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கொழும்பு மாநகரசபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருலுமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின், அடிப்படை உரிமை மீறல் வழக்கை, 2018 மார்ச் 20ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சிறிலங்காவின் சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் சூலானந்த பெரேரா, அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய பணிப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால், அபிவிருத்தி உதவியாளர்களாக 20 ஆயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமானது. இது சிறிலங்காவுக்குப் பாதகமாக இருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டை அடுத்து, ஆற்றில் குதித்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானதை அடுத்து, மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொதுமக்களுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் படைப்பிரிவுடன் இணைந்து, சிறிலங்கா கடற்படையின் மரைன் கொமாண்டோக்கள் சிறப்புப் போர் ஒத்திகை ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.
அண்மையில் வெளியாகிய கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலில் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் இடம்பெறவில்லை.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடத்தி வந்த போரை நிறுத்தி, நிபந்தனையின்றிப் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்று தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றன.
மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமான நிலையமாக, அடுத்த மாத இறுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது என்று, சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.