மேலும்

Tag Archives: மட்டக்களப்பு

சிகிரியாவில் கிறுக்கியதால் சிறை சென்ற மட்டக்களப்பு உதயசிறி இன்று காலை விடுதலை

பழமை வாய்ந்த சிகிரியா குன்றின் பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, அதனைச் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சித்தாண்டியைச் சேர்ந்த, சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேபாள நிலஅதிர்வில் மயிரிழையில் உயிர்தப்பிய மட்டக்களப்பு மருத்துவ மாணவி

நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த பாரிய நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டுவில் மருத்துவக் கல்வியை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமற்போனோர்: புதிய அரசினாலும் தீர்க்கப்படாத பிரச்சினை – கொழும்பு ஆங்கில நாளிதழ்

1971லிருந்து நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கிளர்ச்சிகளின் போதும் மோதல்களின் போதும் மக்கள் காணாமற் போவதற்கு அரச பயங்கரவாதமே காரணமாகும். தனது சொந்த நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை செய்வதில் சிறிலங்கா அரசாங்கம் தாமதம் காண்பிக்கிறது.

கிழக்கு கரையோர தொடருந்துப் பாதை திட்டம் – இந்தியா தீவிர பரிசீலனை

கிழக்கில் கரையோர தொடருந்துப் பாதையை அமைக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து இந்தியா அக்கறையுடன் பரிசீலிக்கும் என்று, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உதவியுடன் கிழக்கில் அமைக்கப்பட்ட முதல் தொகுதி வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட முதல்தொகுதி வீடுகள், இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், புதினப்பலகை ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு, நகர பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் மைத்திரியின் தேர்தல் செயலகம் மீது பெற்றோல் குண்டுவீச்சு

மட்டக்களப்பு – சந்திவெளியில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் செயலகம் மீது நேற்று நள்ளிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக  கொட்டி வரும் பெருமழையால், பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், ஆறுகள் பெருக்கெடுத்தும், குளங்கள் நிரம்பியும், பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.

மட்டக்களப்பில் மகிந்தவுக்கு சிங்களவர்கள் எதிர்ப்பு – காவல்துறை தடியடி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அரங்கிற்கு வெளியே, பிரதான வீதியில் அவருக்கு எதிராக சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.