மேலும்

மாதம்: July 2026

முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரணதண்டனை

புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்திருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை  தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத  சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது, கடமையில் இருந்து தவறியது மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக, சிறிலங்காவின் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஜூலை  மாத பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும்,  பணவீக்கம் ஜூலை  மாதம் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் 26வது தளபதியாக, மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, சிறிலங்கா அதிபர்  அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அமைச்சரின் நிகழ்வைப் புறக்கணித்து ஊடகவியலாளர்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், தாக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்க  வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்  இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அவுஸ்ரேலிய பாதுகாப்பு உதவிச் செயலர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் பேச்சு

அவுஸ்ரேலிய பாதுகாப்புத் திணைக்களத்தின் வட மற்றும் தென் ஆசியப் பிரிவிற்கான உதவிச் செயலர் கரேன் ராட்போர்ட் ( Karen Radford) சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பாக 7 கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.நாவுக்கு கடிதம்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி கத்தோலிக்க குருமார் பேரணி

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி, யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினரால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜேவிபி தலைவர்களுடன் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் சந்திப்பு

ஜேவிபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களுக்கிடையில்  உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.