மேலும்

நாள்: 31st August 2019

விசாரணைகளுக்கு எவ்பிஐ தடங்கலை ஏற்படுத்தவில்லை – சிறிலங்கா காவல்துறை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான உள்ளூர் விசாரணைகளுக்கு, அமெரிக்காவின் சமஸ்டி விசாரணைப் பிரிவு (எவ்பிஐ) தடங்கலாக இருக்கிறது என வெளியாகிய செய்திகளை சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர நிராகரித்துள்ளார்.

கோத்தாவை மாற்றமாட்டோம் – மகிந்த

வரும் அதிபர் தேர்தலிலுக்கான வேட்பாளர் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் மாற்றம் செய்யப்படமாட்டார் என்று பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒக்ரோபர் பிற்பகுதியில் தேர்தல் நாள் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் நடைபெறும் நாள் பற்றிய அறிவிப்பு ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மைத்திரியை வேட்பாளராக அறிவிக்க மகிந்த ‘பச்சைக்கொடி’?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு  இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடமராட்சி களப்பில் மழைநீரை தேக்கும் பாரிய திட்டம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காக, வடமராட்சி களப்பில், மழைநீரைத் தேக்கி வைத்து விநியோகிக்கும் திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘மொட்டு வெற்றி பெறுவது கடினம்’ – மகிந்தவின் முன்னாள் ஆலோசகர்

பொதுஜன பெரமுனவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்களின் நோக்கங்களையும்,  வேறு எவரையும் விட, தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாக, அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் ஊடகப் பேச்சாளர்களாக டலஸ், ரம்புக்வெல

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு இரண்டு ஊடகப் பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பரப்புரை காலத்தில் நீதிமன்றுக்கு அலையப் போகும் கோத்தா

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, ஒக்ரோபர் 15ஆம் நாளில் இருந்து தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஒக்ரோபர் முதல் வாரம் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தேர்தல்

உச்சநீதிமன்ற உத்தரவுக்கமைய எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.