மேலும்

நாள்: 17th August 2019

யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் காணாமல்போனோர் பணியகத்தின் பிராந்திய செயலகம்

காணாமல்போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது, பிராந்திய செயலகம், யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. வரும் 24ஆம் நாள், யாழ். நகரில் காணாமல்போனோருக்கான பணியகத்தின் கிளைச்  செயலகம் திறக்கப்படவுள்ளது.

ஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக,  ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.

சுதந்திரக் கட்சிக்குள் மீண்டும் சந்திரிகா ஆதிக்கம் – புத்துயிர் கொடுக்க நடவடிக்கை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, தனது தந்தையினால், நிறுவப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா, சிறிலங்காவில் ஐஎஸ் அமைப்பின் தடங்கள் கண்டுபிடிப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் தமது செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டதால், இந்தியா, சிறிலங்கா, துருக்கி, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதக் குழு காலடி எடுத்து வைத்துள்ளதாக,  ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி? – இன்று முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார் என உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.