மேலும்

நாள்: 7th August 2019

பதவியைத் தந்து வாயை மூட வைக்க முயன்றார் மைத்திரி – குற்றம்சாட்டுகிறார் சரத் பொன்சேகா

அண்மையில் தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியையும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வழங்க, பாதுகாப்பு அமைச்சராக உள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்கிறார் என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவராக மார்ட்டின் கெலி நியமனம்

சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவராக மார்ட்டின் கெலி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் கொழும்பில் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கரன்னகொட, றொஷானுக்கும் பொன்சேகாவுக்கு இணையான பதவி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த போது, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொடவும், சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்த எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இணையாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

மூடிய அறைக்குள் ரணில் – சஜித் இரகசிய ஆலோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு, ஐதேகவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் மூடிய அறைக்குள் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் – சிறிலங்கா பிரதமர்

இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று கம்போடியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் பயணமாக இன்று கம்போடியாவுக்குச் செல்லவுள்ளார். அவர்  இன்று நொம்பென்னை வந்தடைவார் என, கம்போடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் (வயது-67) நேற்றிரவு மாரடைப்பினால் மரணமானார்.