மேலும்

நாள்: 1st August 2019

அமெரிக்க புலனாய்வாளர்கள் விசாரித்தது உண்மை – ஒப்புக்கொண்டார் ருவன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் அமெரிக்காவின் எவ்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதை,  சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஒப்புக் கொண்டுள்ளார்.

முஸ்லிம் சந்தேகநபர்களுடன் எவ்பிஐ அதிகாரிகள் விவாதித்தது என்ன?- விமல் வீரவன்ச

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சந்தேக நபர்களை, அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்கள் இருவர் சந்தித்துள்ளனர் என, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச  தெரிவித்தார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் நல்லுறவு இருக்கவில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

சில இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்கள் இன்னமும் மறைந்துள்ளனர். அவர்கள் இன்னும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

அவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் அங்கீகரித்துள்ளது. 

பலாலியில் இருந்து தென்னிந்தியாவுக்கு செப்ரெம்பரில் முதல் விமான சேவை

பலாலி விமான நிலையத்தில் இருந்து, இந்திய துணைக் கண்டத்துக்கான பிராந்திய விமான சேவைகளை வரும் செப்ரெம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.