மேலும்

நாள்: 5th August 2019

கோத்தாவின் பாதுகாப்புக்கு யோஷித தலைமையில் தொண்டர் படை

வரும் அதிபர் தேர்தலில் தமது வேட்பாளராக போட்டியில் நிறுத்தவுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளிக்க, தனியான தொண்டர் படை ஒன்றை உருவாக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.

சஜித் – மைத்திரி புதுக்கூட்டணி? : மறுக்கிறது சுதந்திரக் கட்சி

ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  புதிய கூட்டணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கோத்தாவை எதிர்கொள்வதற்கு அச்சம்

கோத்தாபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் களமிறங்குவது குறித்து ஆளும்கட்சியினர் அச்சம் கொண்டுள்ளனர், அதனாலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் அவரது இரட்டை குடியுரிமை தொடர்பாக பேசுகின்றனர் என, றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை ஒழிக்கும் பிரேரணை சட்டவிரோதம் – மைத்திரி

மரண தண்டனையை ஒழிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்டரீதியானது அல்ல என்று சட்டமா அதிபர் தமக்கு அறிவித்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிராக மற்றொரு கூட்டணி – ஆனந்தசங்கரி திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தனது இல்லத்தில் பல்வேறு கட்சிகளுடன் கலந்துரையாடல்களை, நடத்தியுள்ளார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் கூட்டணி உடன்பாடு – ரணில்

இந்த மாத இறுதிக்குள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் போட்டியிடுவதா என்று முடிவு செய்யவில்லை – சிறிலங்கா அதிபர்

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு பலர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், போட்டியிடுவதா இல்லையா என்று தாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

டெனீஸ்வரனை நீக்கியது தவறு – விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த  டெனீஸ்வரனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிபர் தேர்தலில் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு ?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது  தொடர்பாக அவரசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கட்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐதேக கூட்டணி உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைப்பு

புதிய கூட்டணியை உருவாக்கும் விடயத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை அடுத்து, இன்று நடைபெறவிருந்த தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.