மேலும்

மாதம்: September 2019

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை – கேள் அமர்வை நடத்தவுள்ள அமெரிக்கா

சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த கேள் அமர்வு ஒன்றை அடுத்த மாதம் நடத்தவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோத்தா போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றில் விரைவில் மனு

வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பலம்மிக்க நாடுகளின் மோதல்களால் சிறிலங்காவின் இறைமை பாதிப்பு – கோத்தா

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையிலான மோதல்களில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஈடுபாட்டினால், சிறிலங்காவின் இறைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முடிவை மறுபரிசீலனை செய்கிறதாம் ஐ.நா – சிறிலங்கா இராணுவத் தளபதி கூறுகிறார்

ஐ.நா அமைதிப்படையில் இருந்து சிறிலங்கா படையினரை வெளியேற்றும் முடிவு தொடர்பாக, ஐ.நா மறுபரிசீலனை செய்து வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க – சிறிலங்கா மரைன் படையினரின் கூட்டுப் பயிற்சி நிறைவு

அமெரிக்க கடற்படையின் பசுபிக் மரைன் படைப்பிரிவும், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து,  இருதரப்பு மருத்துவ பரிமாற்ற பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.

கட்சி எந்த முடிவை எடுத்தாலும் கோத்தாவையே ஆதரிப்பேன் – நிமல் சிறிபால

தமது கட்சி எந்த முடிவை எடுத்தாலும், தாம், பொதுஜன  பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கே ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உபதலைவர்  நிமல் சிறிபால டி சில்வா.

போர்க்குற்றவாளிகளை தண்டிப்போம் – சம்பிக்க ரணவக்க

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு பணம் கொடுத்ததை ஒரு போர்க்குற்றமாகவே கருத வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மொட்டு சின்னத்தை கைவிட முடியாது – மைத்திரிக்கு மகிந்த அறிவிப்பு

வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னம் மாற்றப்படாது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மொட்டுக்கு ஆதரவு அளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டம்

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கத் தயார் என்ற போதும், மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் அளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டி – ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.