மேலும்

நாள்: 12th August 2019

மீண்டும் வலுப்பெறும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் – ஷிரந்தி மாற்று வேட்பாளரா?

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை, குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இலங்கையர்கள் எதேச்சாதிகாரியை விரும்புகின்றரா? – ரொய்ட்டர்ஸ்

250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமையினால்,  கோபமடைந்த இலங்கையர்கள், தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரக்கூடிய, வலிமைமிக்க ஒருவர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை விரும்புகிறார்கள்.

அடுத்த அதிபர் மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார்- மங்கள சமரவீர

சிறிலங்காவின் அடுத்த அதிபர் மற்றொரு ராஜபக்சவாக இருக்கமாட்டார் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அமெரிக்கா துணை நிற்கும் – அலிஸ் வெல்ஸ்

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சிறிலங்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்காளர்களுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் வேட்பாளரும் தயார் – வரும் ஞாயிறு அறிவிக்கப்படுவார்

அதிபர் தேர்தலில் நிறுத்தப்போகும் வேட்பாளரை ஜேவிபி தீர்மானித்து விட்டது என்றும், ஆனால் ஓகஸ்ட் 18ஆம் நாள் வரை அதனை வெளிப்படுத்தப் போவதில்லை என்றும் கட்சியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைவேன் – சஜித்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று ஐதேகவின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவினர் பழையை வழியை மாற்றமாட்டார்கள்  – ரணில்

முன்னைய ஆட்சியின் தலைவர்கள் புதிய பெயரிலும் புதிய வண்ணத்திலும் வந்தாலும், தமது  பழைய வழிகளை மாற்ற மாட்டார்கள் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறைமையில் யாரும் கைவைக்க விடமாட்டேன் – கோத்தா சூளுரை

நாட்டின் இறையாண்மையை வேறெந்த எந்த நாட்டிற்கும்  விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.