மேலும்

நாள்: 26th August 2019

ஒக்ரோபர் 15இல் பலாலி விமான நிலையம் திறப்பு – இன்றைய கூட்டத்தில் முடிவு

பலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது. எளிமையான வகையில் நடக்கவுள்ள இந்த திறப்பு விழா நிகழ்வை அடுத்து. இந்தியாவுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு ‘ஊடக’ காய்ச்சல் – இளைஞர் மாநாட்டில் அனுமதி மறுப்பு

பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து, நாமல் ராஜபக்ச மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை

பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சே பதிலளிக்கும் – சவேந்திர சில்வா

தன் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தக் குற்றச்சாட்டுகள் விடயத்தில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்ததும் புதிய விசாரணைக் குழு – பேராயருக்கு கோத்தா உறுதி

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதாக, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – ரணில்

தேசிய ஜனநாயக முன்னணி விரைவில் உருவாக்கப்படும் என்றும், அதன் வேட்பாளரின் பெயர் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.