மேலும்

நாள்: 2nd August 2019

ஐதேக செயற்குழு கூட்டத்தில் குழப்பம் – கூட்டணியை உருவாக்குவதில் சர்ச்சை

வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கும் நோக்கில் நேற்று கூட்டப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஊடகங்களில் உலாவும் கோத்தாவின் மற்றொரு குடியுரிமை ரத்து சான்றிதழ்

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டது தொடர்பான சான்றிதழ் என, மற்றொரு ஆவணம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது.

பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களில் குடிவரவு, சுங்க பணியகங்களை நிறுவ அனுமதி

சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், பிராந்திய மட்டத்தில் வணிக விமானங்களை இயக்குவதற்கு, பலாலி, மட்டக்களப்பு, இரத்மலானை ஆகிய மூன்று உள்நாட்டு விமான நிலையங்களையும்  பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கோத்தாவுக்கு மே 7இல் வழங்கப்பட்ட புதிய கடவுச்சீட்டு  

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கடந்த மே 7 ஆம் நாள் புதிய கடவுச்சீட்டு வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆர்.எம். பி.எஸ். பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

கோத்தாவுக்கு துமிந்த திசநாயக்க சவால்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமை தொடர்பான உண்மையான சான்றிதழை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க சவால் விடுத்துள்ளார்.

செப்ரெம்பர் 2ஆம் நாள் அதிபர் வேட்பாளரை அறிவிப்பார் மைத்திரி

அடுத்த மாதம் 2ஆம் நாள் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள, மாநாட்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அந்தக் கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.