மேலும்

நாள்: 29th August 2019

ஐதேகவின் விருந்தில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் தூதுவர்கள்

ஐதேகவின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று நடந்த இராப்போசன விருந்தில் இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தா படுகொலை சதி – செய்தி உண்மையில்லை

கோத்தாபய ராஜபக்சவையோ, அல்லது மகிந்த ராஜபக்சவையோ படுகொலை செய்யும் சதி தொடர்பாக, தடுப்புக்காவலில் உள்ள பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிவரூபன் வாக்குமூலம் அளிக்கவில்லை என்று சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் பெண் வேட்பாளர்

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா சோசலிசக் கட்சி பெண் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. பிரபல சூழலியலாளரான கலாநிதி அஜந்தா பெரேரா என்பவரே, சோசலிச சட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.பி , டிலான் பெரேரா மகிந்தவிடம் ஓட்டம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.பி.திசநாயக்கவும், டிலான் பெரேராவும் இன்று மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டனர்.

இராணுவ புலனாய்வு பணிப்பாளர் அதிரடியாக நீக்கம்

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சூல கொடிதுவக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எம்சிசி கொடை உடன்பாட்டில் கையெழுத்திட மைத்திரி மறுப்பு

மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் நிதிக்கொடையை பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட அனுமதிக்க முடியாது என்றும், அதனை அடுத்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் எனவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து சேவை நடத்த 5 உள்நாட்டு, 2 இந்திய நிறுவனங்கள் போட்டி

பலாலி விமான நிலையம் ஒக்ரோபர் நடுப்பகுதியில் திறக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து விமான சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளன.

கோத்தாவை கொல்ல முயற்சி?

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு பாதாள உலக குழுவினருடன் பேரம் பேசப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு  பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிறது.