மேலும்

நாள்: 19th August 2019

சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சவேந்திர சில்வா நியமனம் – கூட்டமைப்பு கலக்கம்

பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மிகுந்த கலக்கமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா நியமனம் – அமெரிக்கா சீற்றம்

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பளை மருத்துவமனை பொறுப்பதிகாரி சிறிலங்கா இராணுவத்தினரால் கைது

கிளிநொச்சி- பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியானார் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

காஷ்மீர் அதிர்வலைகள் –  பகுதி 2

பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பதவிக்கு வந்த காலத்தில் இருந்து அமெரிக்க  அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திப்பதற்கு தடையாக,  பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்து வந்தன.

தளபதி இல்லாத சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, நேற்றுடன் அதிகாரபூர்வமாக சேவையில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக கடுமையான இழுபறி தோன்றியுள்ளது.

ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள் பலாலியில் இருந்து விமான சேவை

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒக்ரோபர் நடுப்பகுதிக்குள், விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராகி விடும் என்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்துள்ளார்.