அந்தோனியார் தேவாலயத்தில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்
சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டார்.