கோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையை, ஒரு சுயாதீன அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும், அது சட்டத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் இரத்தம் குடித்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடை வாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா அரசியல்வாதிகள் பலரும், அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் டொலர் கொடை தொடர்பான உடன்பாட்டில் கைச்சாத்திடுவதற்கு, வரும் ஜனவரி மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்கா இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பான விடயத்தில், வெளிநாட்டுத் தரப்பினர் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கனடா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்திற்கான சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போரில் தப்பியவர்களுக்கு ஒரு கவலையான செய்தியை அனுப்பியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது